ஓசூர் வனப்பகுதியில் நீர் நிறப்பும் பணி

ஓசூர் வனப்பகுதியில் நீர் நிறப்பும் பணி

ஒசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டிற்குள் உள்ள தொட்டிகளில் நீர் நிறப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.


ஒசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டிற்குள் உள்ள தொட்டிகளில் நீர் நிறப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஒசூர் வனக்கோட்டத்தில் கடும் வறட்சி, வனவிலங்குகளை காக்கவும், ஊருக்குள் படையெடுப்பதை தடுக்க காட்டிற்குள் உள்ள தொட்டிகளில் நீர் நிறப்பும் பணியில் வனத்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 ச.கி.மீ ஆகும். இதில் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 504.33 ச.கி.மீ மற்றும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தின் பரப்பளவு 686.406 ச.கி.மீ ஆகும் இங்கு 468 வகைாயன தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்து பூச்சிகளும் காணப்படுகின்றன. குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மா வகைகளும், அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள்.

எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் காணப்படுகின்றன. ஓசூர் வனக்கோட்டமானது காவேரி, சின்னாறு, தென்பெண்ணையார் மற்றும் தொட்டஹல்லா ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக அமைந்துள்ளது. மேலும், ஓசூர் வனக்கோட்டத்தில், காவேரி வடக்கு மற்றும் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயங்களில் பல்வேறு வகையான பறவை இனங்கள் மற்றும் இதர வனஉயிரினங்கள் வசித்து வருகின்றன. ஓசூர் பகுதிக்கு போதுமான மழை பெய்யாததால் தற்போது நீர்நிலைகள் வற்றியுள்ளன. ஜவளகிரி, தளி, சானமாவு, நொகனூர் உள்ளிட்ட அடர் வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கான குடிநீர் பகுதிகளான குட்டை, நீரோடைகள் முழுமையாக வற்றியதால் வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுப்பதை தடுக்கவும், வனவிலங்குகளை காக்கவும் வனப்பகுதிகளுக்குள்ள வனத்துறையினர் சார்பில் வெட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் டிராக்டர்கள் மூலம் நீரை நிறப்பி வருகின்றனர்

Tags

Next Story