ஆத்தூர்: கரிய கோவில் அணையில் பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு

ஆத்தூர்: கரிய கோவில் அணையில் பாசனத்திற்க்கு  தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக நீர் திறப்பு

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்கா அருகே கரிய கோவில் அணையில் இருந்து பாசனத்திற்க்காக 22 நாட்களுக்கு 40 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட 52 அடி உயரம் உள்ள கரிய கோயில் நீர்த்தேக்கத்தில் தும்மல், பாப்பநாயக்கன்பட்டி,இடையாப்பட்டி கிராம்ம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்து விட உத்திரவிடப்பட்ட நிலையில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கோகுல் ராஜா விவசாயிகள் பாசனத்திற்க்கு 22 நாட்களுக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து வைத்தார்.

இதில் இன்று முதல் 11 நாட்கள் ஆத்து பாசனத்திற்காகவும் மார்ச் 11 நாட்கள் 3600 ஏக்கர் வாய்க்கால் பாசனத்திற்காகவும் தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கவிதா ராணி, பெத்தநாயக்கன்பாளையம் பாசன பிரிவு உதவி பொறியாளர் சண்முகம், சிறப்பு அழைப்பாளராக பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story