மதுரவாயலில் தண்ணீர் பந்தல் திறப்பு

மதுரவாயலில் தண்ணீர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுரவாயிலில் தண்ணீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-147ல் ஆலப்பாக்கம் பெரியார் பூங்கா, சீமாத்தம்மன் நகர் கோவில் அருகில், கங்கா நகர், அஷ்டலட்சுமி நகர் தீன் மஹால், அஷ்ட லட்சுமி நகர் போலீஸ் பூத் ஆகிய 5 இடங்களில் வட்ட செயலாளர் மாதவன் அவர்களின் ஏற்பாட்டில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பொது மக்களுக்கு தர்பூசணி பழம், பழரசம், மோர் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், மாமன்ற உறுப்பினர் ரமணி மாதவன்., அவைத் தலைவர் வெங்கடேச பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் க.பிருந்தாவனன், சதீஷ், குப்புசாமி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கோபிநாத், துணை வட்ட செயலாளர்கள் முருகன், தமயந்தி இளங்கோவன், பகுதி பிரதிநிதிகள் ராஜன், ஜெயமுருகன், ஜீவானந்தம் மற்றும் ஆலப்பாக்கம் உதயம் வேணு, ரவிக்குமார், ஜெயக்குமார், தியாகராஜன், தினேஷ், மேட்டுக்குப்பம் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story