மேட்டூரில் குடிநீர் குழாய் உடைப்பு - பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
குடிநீர் குழாயில் உடைப்பு
மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. காடையாம்பட்டி கூட்டு குடி நீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட நீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.
Next Story