குடிநீர் குழாய் உடைப்பு - சரி செய்யும் பணிகள் துவக்கம்

குடிநீர் குழாய் உடைப்பு - சரி செய்யும் பணிகள் துவக்கம்
நாகராஜா கோவில் முன்பு குடிநீர் குழாய் உடைப்பால் சாலை உடைந்தது
நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ரூபாய் 296 கோடி மதிப்பில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. இந்த திட்டத்துக்காக குலசேகரம் அருகே உள்ள புத்தன் அணையில் இருந்து 31.85 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது.

தற்போது வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து, அதற்கான சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு சோதனைக்காக குழாய்களின் தண்ணீர் திறந்து விடும் போது ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாகராஜா கோயில் அருகே உள்ள தெற்கு வாசல் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாயிலும் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக ஓடியது. சாலையை பிளந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் நாகராஜா கோயிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடைப்பை சரி செய்யும் வகையில் உடனடியாக தண்ணீர் விநியோகம் நடத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் அரவிந்த கிருஷ்ணாவும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டார். உடைப்புகளை சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story