குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி

குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென் அழகாபுரத்தில் குடிநீர் செல்லும் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்ட நிலையில், சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென் அழகாபுரத்தில் குடிநீர் செல்லும் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்ட நிலையில், சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாரதா கல்லூரி சாலையில் தென் அழகாபுரம் பகுதியில் குடிநீர் செல்லும் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அருள் எம்.எல்.ஏ. அங்கு சென்று பணிகளை பார்வையிட்டு இதற்கான காரணத்தை கேட்டார்.

அப்போது அந்த பைப்புகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது என்றனர். இதையடுத்து சேலம் மாநகராட்சி கமிஷனரை எம்.எல்.ஏ. தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் புதிய பைப்களுக்கு நிதி ஒதுக்கி பைப் லைன்கள் மாற்றி போடப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கபடும் என்றார்.

Tags

Next Story