இரணியல் அருகே குடிநீர் குழாய் சேதம்: 30 அடி உயரத்தில் சென்ற தண்ணீர்

இரணியல் அருகே குடிநீர் குழாய் சேதம்: 30 அடி உயரத்தில் சென்ற தண்ணீர்

பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்

இரணியல் அருகே குழாய் உடைந்து 30 அடி உயரத்தில் குடிநீர் பீச்சி அடித்தது.

காப்பிக்காடு அருகே விளாத்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து புதுக்கடை, கிள்ளியூர், கருங்கல், திங்கள்நகர், இரணியல் நெடுஞ்சாலை வழியாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லப்படு கிறது.

கடலோர கிராமங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளை இணைக்கும் சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட இந்த குழாய்கள் அழுத்தம் தாங்காமல் அவ்வப்போது ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணாகும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இந்த நிலையில் இன்று இரணியல் வள்ளியாற்று பாலம் மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணா கியது. சுமார் 30 அடி உயரத்திற்கு சாலையில் பீச்சி அடித்த தண்ணீரால் வாகனங்கள்,

பயணிகள் நனைந்தவாறு சென்றனர்.கோடை வெயில் வாட்டிவதைக்கும் நிலையில் வீணாய் சாலையில் வழிந்தோடிய குடிநீரை மக்கள் ஏக்கப்பார்வை பார்த்துச்சென்றனர். தோட்டி யோடு-புதுக்கடை மாநில நெடுஞ்சாலையில் இதேபோன்று குடிநீர் வீணாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story