குடிநீர் குழாய் பதிக்கும் பணி - திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்
குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக திருப்பூர் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரையிலான சாலையில் அமருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரக்கூடிய சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பணி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story