குடிநீர் குழாய் திருட்டு - 2 இளைஞர்கள் கைது

X
கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கிச்சன் மகன் சேகர் வயது (25). இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் இசக்கியப்பன் வயது (25). சேகரும் இசக்கியப்பனும் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் கிராமத்தில் பஞ்சாயத்திற்கு சொந்தமான குடிநீர் குழாய்களை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணலூர் பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கரிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகர் இசக்கியப்பன் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர்
Next Story
