அணையின் நீர் திறப்பால் விவசாயிகள் தீவிரம்

அணையின் நீர் திறப்பால் விவசாயிகள் தீவிரம்
X

அணையில் இருந்து நீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையில் இருந்து நீர் வெளியேற்றுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணை பகுதிகளில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 1203 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மிகவும் ஆவலுடன் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story