மேட்டூர் அணையில் நீர்வளத் துறையினர் ஆய்வு
மேட்டூர் அணையில் நீர்வளத் துறையினர் ஆய்வு
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையில் நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து காவிரி கரையோர பகுதி மக்களின் குடிநீர், கால்நடை பராமரிப்பு தேவைக்காகவும், காவிரி கரையோர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணி வருடாந்திர பருவ கால ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம், கவர்னர் மாளிகை மற்றும் அணையின் மேல் பகுதிக்கு சென்று நிறைவடைந்த பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறும் பொழுது மேட்டூர் அணையில் 71 அடி அளவுக்கு தண்ணீர் இருப்பதால் காவிரி கரையோர பகுதி மக்களின் குடிநீர், கால்நடை பராமரிப்பு தேவைக்காகவும், காவிரி கரையோர பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருப்பு உள்ளதாகவும் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் தேவைக்கேற்ப குடிநீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 22 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் . இதனால் 16 கண் மதகு பகுதியில் தண்ணீர் அசுர வேகத்தில் ஆர்ப்பரித்து சென்றதால் தரைத்தளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க நீர்வள ஆதாரத்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
Tags
Next Story