தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் நாளை  குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பைல் படம் 

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 15.6.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story