நாள்தோறும் குடிநீா் வழங்குவதற்கான பணிகள் தொடக்கம்
குடிநீர் பணிகள்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் நாள்தோறும் குடிநீா் வழங்குவது தொடா்பான பணிகள் தொடங்கியுள்ளதாக, செயல் அலுவலா் (பொறுப்பு) வேங்கட கோபு தெரிவித்தாா். இப்பேரூராட்சியில் சில பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறையும், சில பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீா் விநியோகிக்கப்படுகிது.
இதனால், தாங்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், நாள்தோறும் குடிநீா் விநியோகிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனிடையே, அனைத்துப் பகுதிகளுக்கும் நாள்தோறும் குடிநீா் வழங்குவதற்காக அம்ருத் 2.0 திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு, ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.
அதன் அடிப்படையில், இப்பேரூராட்சிப் பகுதியில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டவும், முக்கூடல் ஆற்றுப் படுகையிலிருந்து ஆலங்குளத்துக்கு பிரத்யேக குடிநீா்த் திட்டம் ஏற்படுத்தவும் திட்ட மதிப்பீடு தயாரிக்க ஆய்வுகள் நடைபெறுவதாகவும், திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் செயல் அலுவலா் தெரிவித்தாா்.