சித்தேரிப்பட்டில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

சித்தேரிப்பட்டில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் 

சித்தேரிப்பட்டியில் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், முகையூர் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் இருந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விக்னேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் நித்யா, முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகந்நாதன், சண்முகம் மற்றும் ஒன்றிய பொறியாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சித்தேரிப்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்தனர். அதன்படி நேரடி இணைப்பு மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

மேலும் ரூ.33 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இது தவிர பொது மக்கள் நலன் கருதி 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேலும் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story