வன விலங்குகளுக்கு தேவையான நீர் குளத்தில் நிரப்பும் பணி

வன விலங்குகளுக்கு தேவையான நீர் குளத்தில் நிரப்பும் பணி
குளத்தில் நீர் நிரப்பும் பணி
வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள குளங்களில் வனத்துறையினர் நீர் நிரப்பி வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுக்கரணை, காட்டுக்கூடலுார், சோத்துப்பாக்கம், ராமாபுரம், எலப்பாக்கம் உள்ளிட்ட பகுதியை இணைத்து, வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இக்காட்டில் மான், முயல், குள்ளநரி, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. பல வகையான பறவைகளும் உள்ளன. மேலும், மான், மயில் போன்றவை, சில ஆண்டுகளாக அதிக அளவில் உலா வருவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இக்காட்டுப்பகுதியில், மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல், மே மாதங்களில், கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தண்ணீரைத் தேடி வன விலங்குகள், விவசாயப் பகுதிகளுக்கு செல்கின்றன. இதை தடுக்கும் விதமாக, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை பகுதிகளில், அச்சிறுபாக்கம் வனத்துறையினர் வாயிலாக குளம் வெட்டப்பட்டு உள்ளது. இதில், டிராக்டர் இயந்திரத்தில் நீர் கொண்டு வரப்பட்டு, வன விலங்குகளுக்கு தேவையான நீர், அந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. இதனால், வன விலங்குகள் தண்ணீர் தேடி விவசாய பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story