ஆபத்தான நிலையில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி

ஆபத்தான நிலையில் குடிநீர்  நீர்த்தேக்க தொட்டி

  ஆனம்பாக்கத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித் தர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

ஆனம்பாக்கத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித் தர வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆனம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், பள்ளத்தெரு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம், தண்ணீர் ஏற்றி அப்பகுதியில் உள்ள மேட்டு தெரு, பள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இக்கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடம் என்பதால், தற்போது சிதிலமடைந்து, சிமென்ட் காரை உதிர்ந்து காணப்படுகிறது.

மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் ஏற்பட்டு, பலவீனமாக உள்ளன. இதனால், இக்கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என, அப்பகுதி வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பழுதான இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story