தமிழக கடற்பகுதியில் இன்று 4.1மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும்
கடல் அலை
இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம்(INCOIS) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக கடற்பகுதியில் இன்று 4.1மீ உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என INCOIS எச்சரிக்கை. தென் தமிழக கடற்பகுதியில் குறிப்பாக குளச்சல் முதல் கீழக்கரை வரை இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 0.6 முதல் 4.1 மீ உயரம் வரை,
இருக்கும். வட தமிழக கடற்பகுதியில் குறிப்பாக பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 0.6 முதல் 4.0 மீ உயரம் வரை இருக்கும். தென் வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் 24ஆம் தேதி வரைக்கும், மத்திய வங்கக்கடல் பகுதியில் 26ஆம் தேதி வரைக்கும், வட வங்கக்கடல் பகுதியில் 25 முதல் 27 ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கப் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் விரைந்து அருகாமை கடற்கரைக்குத் திரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.