விவாசயத்திற்கு தண்ணீரை போராடி தான் பெற வேண்டியுள்ளது- ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்ட விவாசய பணிகளுக்கு போராடி போராடி தான் தண்ணீரை பெற வேண்டியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்,
முல்லை பெரியாறு மற்றும் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய 3 பாசன பகுதிகளுக்கு நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனு அளித்தார், மனுவில் "முல்லை பெரியாறு அணையில் 9000 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது, முல்லை பெரியாறு மற்றும் வைகை அணையில் போதிய நீர் உள்ளதால் பாசனத்திற்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், பேரணை முதல் கள்ளந்திரி வரை இரு போக பாசனத்திற்கு 45,000 ஏக்கரும், மேலூர் ஒரு போக பாசனத்திற்கு 85,000 ஏக்கரும், திருமங்கலம் ஒரு போக பாசனத்திற்கு 19,500 ஏக்கர் ஆகிய 3 பாசன பகுதிகள் தண்ணீர் திறப்பால் பயன்பெறும்" என கூறப்பட்டுள்ளது, பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரை மாவட்ட விவாசய பணிகளுக்கு போராடி போராடி தான் தண்ணீரை பெற வேண்டியுள்ளது, மதுரை மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம், முல்லை பெரியாறு அணையில் 6,000 கன அடி தண்ணீர் இருந்தாலே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கலாம், பல இடங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது, மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டவில்லை, விவசாயிகளுக்கு இருபொருள் மானியம் வழங்கப்படவில்லை, அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் விதிகளை தளர்த்தி எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கினார், வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, அரசியல் காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தமிழக அரசு செய்ய வேண்டும்" என கூறினார்
Next Story