தார் ரோடு வேணும்...!

தார் ரோடு வேணும்...!

 திருவெறும்பூர் அருகே குவளக்குடியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தார் ரோடு அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருவெறும்பூர் அருகே குவளக்குடியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தார் ரோடு அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் குவளக்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் ரிட்ஸ் அவன்யூ பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகு கே செந்தில்குமார் தலைமை வகித்தார், முன்னாள் எம் எல் ஏ கே என் சேகரன், மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் கே எஸ் எம் கருணாநிதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் கோவிந்தராஜன், ரெக்ஸ், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சத்யா கோவிந்தராஜ் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிகிசன்சிங், கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள துறைகளை பார்வையிட்டு அதன் பணிகளையும் சேவைகளையும் கேட்டறிந்தார். பின்னர் பேசுகையில் மக்களுடன் முதல்வர் எனும் அற்புதமான திட்டத்தை தமிழக முதல்வர் உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார். இதன் மூலம் மக்களுக்கு அரசின் துறைகள் நேரடியாக வந்து பல்வேறு சேவைகளை செய்து கொடுத்து உதவி வருகிறது. இது ஒரு அற்புதமான திட்டம் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் பேசினார். அப்பொழுது ஊராட்சி மன்ற தலைவர் அழகு கே செந்தில்குமார் எம் பி யிடம் எம்பி தொகுதி நிதியில் காட்டூர் வீதி வடங்கம் முதல் எஸ் ஐ டி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள உய்ய கொண்டான் கரை மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர விண்ணப்பம் கொடுத்தார் அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தலைவரிடம் எம்பி உறுதி அளித்தார். முகாமில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை எரிசக்தி துறை சமூக நலத்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை தொழிலாளர் நலத்துறை கூட்டுறவுத்துறை குடிசை மாற்று வாரியத்துறை நகராட்சி நிர்வாக துறை காவல் துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மருத்துவத்துறை மகளிர் மேம்பாட்டு துறை உள்ளிட்ட இ சேவை உள்ளிட்ட 13 துறைகள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது பெறப்படும் விண்ணப்பங்களில் உடனடியாக தீர்வு காண்பதற்கு ஏதுவாக மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

30 நாட்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கக்கூடிய இடங்களுக்கு முதல்வரின் முகவரி இணையதளத்தில் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்புடைய அரசு துறைகளுக்கு உரிய மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனுப்பியும் வைக்கப்பட்டது. முகாமில் மொத்தம் 333 மனுக்கள் பெறப்பட்டு 81 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் குவளக்குடி ஊராட்சி பொதுமக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களும் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை முகாமில் கொடுத்து தீர்வு கண்டனர்.

Tags

Next Story