இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம்
கார்த்திக் சிதம்பரம் பிரசாரம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி நெசவாளர் காலனி, கழனிவாசல், பர்மா காலனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் கேட்டு சிவகங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் அவர் பேசும் போது, பாஜக ஆட்சியில் அனைத்து விலைவாசியும் ஏறிவிட்டது. தங்கம் ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. சோப்பு, சீப்பு, கண்ணாடி, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை ஏறிவிட்டது. எல்லா விலையும் குறைய வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். தமிழக அரசின் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு, கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய், கட்டணமில்லா பேருந்து பயணதிட்டம் ஆகியவை தொடர வேண்டும் என்றால் தமிழகத்திற்கு அதிக நிதி வேண்டும். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது.
வட இந்தியாவில் ஒரு ரூபாய் வரிக்கு இரண்டு ரூபாய் 73 காசு திரும்ப கிடைக்கிறது. நமது கலாச்சாரங்கள் கோவிலுக்கு ஆடு, கோழி வெட்ட நேர்த்தி கடன் செலுத்துவோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் இதற்கெல்லாம் தடை விதிப்பார்கள். நமது கலாச்சாரம் தொடர வேண்டும் என்றால் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஆக்கி விடுவார்கள். உள்ளாட்சி பிரதிகளை தூக்கிவிட்டு அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்தி விடுவார்கள். உயிர் இருக்கும் போதுதான் உயிரை காப்பாற்ற முடியும். ஜனநாயகம் இருக்கும்போது தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சி ஆக மாறிவிடும். இவையெல்லாம் மாற வேண்டும் என்றால் திமுக கூட்டணி கைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். எனக்கு ஜாதி, மதம் கிடையாது. தேர்தல் வரை போன் எடுத்தால் ஹலோ என்று சொல்லாமல் கைச்சின்னம் என்று சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.