மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை கடவுளாக பார்க்கிறோம் - அன்பில் மகேஷ்

மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை கடவுளாக பார்க்கிறோம் -  அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி விழாப் பேருரையாற்றினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, என்னை பொறுத்த வரைக்கும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை கடவுளாக பார்க்கிறோம் என்று மறக்காமல் சொல்வது வழக்கம். சொல்வதற்கு காரணம் அந்த பிள்ளைகளை தங்கள் வீட்டோடு வைத்து விடாமல் என்னுடைய பிள்ளைக்கும் திறமை உண்டு என்னுடைய பிள்ளையும் அறிவில் சிறந்தவராக வருவார் என்று எங்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர், தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார் அந்த வகையில் நமது விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உங்களுக்கான பாதையை கடற்கரை ஓரமாக அமைத்தார் என்று சொல்லும் போது கடற்கரை எங்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல அதன் அருகே சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிக்கும் சொந்தம் என்று அதனை அமைத்துக் கொடுத்தவர் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் என்று சொல்லும் போது அவருக்கு உங்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Tags

Next Story