இந்திய குடிமக்களாகிய நாம் இரண்டாம் பாகம் நூல் அறிமுகம்

ஆத்தூரில் வட்டார அரசமைப்பு உரிமை கல்வி மன்றத்தின் சார்பாக அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை இந்திய குடிமக்களாகிய நாம் இரண்டாம் பாகம் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்டார அரசமைப்பு உரிமை கல்வி மன்றத்தின் சார்பாக அரசமைப்பு சட்டத்தின் முகப்புரை இந்திய குடிமக்களாகிய நாம் இரண்டாம் பாகம் நூல் அறிமுகம் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் மனித உரிமை கல்வி நிறுவனத்தின் மாவட்ட அமைப்பாளர் ராமு தலைமை தாங்கினார் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்புரை ஆற்றினார் தாண்டராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லிசா சுரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்..ஊராட்சி செயலர் சாமி வாழ்த்துரை வழங்கி னார்,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சகுந்தலா தேவி,கல்வராயன் மலை மீனா,வெள்ளிமலை சரோஜா ஆகியோர் மலை கிராம குழந்தைகளின் கல்வி குறித்து பேசினர் .

அரசமைப்பு சட்டத்தின் முகப்புறை வாசித்தனர்.. மக்களாட்சி முக்கியத்துவம் குறித்து விவாதிததனர்..குழந்தைகளுக்கு தரமான கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான வன்முறைகள் தடுத்து நிறுத்துதல்.,போதை பழக்கத்தில் இருந்து குழந்தைகளை மீட்டல், இணையதளம், செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்தி கல்வி கற்றல். மலை கிராமத்தில் குழந்தை திருமணத்தை தடுத்தல், மலை கிராமங்களில் இடைநிற்றலை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளை குழந்தைகள் மன்றங்கள் மூலம் செயல்படுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றினர். குழந்தைகள் சங்கத் தலைவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Tags

Next Story