நாம் செய்த பாவம் நீங்க ஸ்ரீராமன் தயவு வேண்டும்: இறைவன் திருவடி உயர்ந்தது
திருச்சி கல்யாண சுந்தரம்
தகுதி இல்லாத ஒன்றை தூக்கி எறிய வேண்டும் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
இது பற்றிய விவரம் வருமாறு மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வருகிறது பாதுகா பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் கலைமாமணி திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது. எம்பெருமான் ராமன் திருவடியே சரண் என்று இருக்கிற பரதனை குகன் பாராட்டுகிறான். உன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை என்கிறான். கம்பராமாயணம் மகாபாரதம் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருக்குறளுக்கு நிகர் உலகில் எதுவுமில்லை.
நமக்கு தகுதி இல்லாத ஒன்றை தூக்கி எறிய வேண்டும். தகுதி உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க வேண்டும். ராமர் கொடுத்தார். அருணகிரிநாதர் திருப்புகழ் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். சூரிய குலத்தில் பிறந்த ராமன் பரதனுக்கு பதவியை கொடுத்துவிட்டு காட்டிற்கு போனான் அதுபோல முருகப்பெருமான் பிள்ளையாருக்கு ஞானப்பழத்தை கொடுத்து விட்டு பழனிக்கு வந்தான் என்கிறார் அருணகிரிநாதர். ஒரு விஷயத்தில் ஈடுபடுகிற போது அது உடனே முடியும் என்று நினைக்க கூடாது. உணர்ச்சிவசப்பட்டு வேகமாக பேசுபவர்களிடம் நாம் பேசக்கூடாது. தவிர்க்க வேண்டும்.
ராம தூதன் ஆஞ்சநேயர் ஆனால் ராமனுக்காக பூமாதேவிக்கு தூது போனான் பரதன். தாய் தந்தையர்கள் நம்மோடு இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பகவன் நாமாவை விட திருவடி முக்கியம். பகவான் திருவடியை சிக்கன பிடித்துக் கொள்ள வேண்டும். பாதுகா சகஸ்ரம் என்று பாடல்களை பாடினார் சுவாமி வேதாந்த தேசிகர்.ஒரு காரியத்தை செய்யும் போது அதை செய்யலாமா என்று மனைவியிடம் கேட்க வேண்டும் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் என்று முதல் முதலில் ஆதார் கொண்டு வந்ததே திருவள்ளுவர் தான். நாம் செய்த பாவம் நீங்க ஸ்ரீராமன் தயவு வேண்டும்.
இறைவன் திருவடி உயர்ந்தது இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார். சொற்பொழிவு வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது