திமுக,அதிமுக இல்லாத ௯ட்டணியில் ஆட்சி அமைப்போம் - அன்புமணி ராமதாஸ்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தேவதாஸ் ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டை தியேட்டரில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அப்போது தேவதாஸ் வெற்றி பெற்றால் பாரதத்திலே பாரத பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெறுவது உறுதி வருகின்ற 2026 தேர்தலில் திமுக அதிமுக இல்லாத கூட்டணியில் நாம் ஆட்சியை அமைப்போம்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் வந்ததில்லை. இந்தத் தேர்தலில் நமது சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவரை வேட்பாளராக சமூக நீதிப் போராளி நிறுத்தியுள்ளார் சேலம் மேட்டூர் உபரி நீர் திட்டம் ஆத்தூர் வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும். இந்த நீர் தலைவாசல் வரை செல்ல வேண்டும் 57 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக அதிமுக இவர்கள் ஆட்சி செய்தது போதும். ஆத்தூரில் குடிக்க நீர் இல்லை தமிழ்நாடு முழுவதும் இந்த இரு கட்சிகளை பார்த்த மக்கள் வெறுப்பில் உள்ளார்கள் கொள்ளையடித்துக் கொள்ளையடித்து இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் 500 1000 கொடுத்து விடுகிறார்கள். தமிழகத்தின் இந்த இரு கட்சிகளும் உங்களது தாத்தாவை முதலில் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்கினார்கள்.
அதன் பிறகு உனது அப்பாவை பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள் அடுத்து உங்களை அடிமையாக்கினார்கள் அடுத்து உங்களது குழந்தைகளை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகினார்கள் குடிப்பழக்கத்தை விட தற்போது மோசமான போதை பழக்கம் உள்ளது. போதைப்பழக்கம் என்றால் கஞ்சா அபின் பவுடர் சாக்லேட். இதற்கெல்லாம் நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் இந்த தேர்தலில் நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் முதலமைச்சர் சுதி பாடுவதற்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நிர்வாகம் எவ்வாறு செய்வது என்று தெரியாது. மாம்பழத்திற்கு நீங்கள் ஓட்டு போட்டால் நீங்கள் ஓட்டு போட்டால் ஆத்தூர் மாவட்டமாக உருவாக்கப்படும். திமுக கடந்த தேர்தலில் பல வாக்குறுதிகள் கொடுத்தார்கள் அதில் முக்கியமானது பழைய ஓய்வூதி திட்டத்தை திரும்ப கொண்டு வருவோம் என்று கூறியது . தற்போது கூறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது இதுவரை நிறைவேற்றவில்லை. உங்களுக்கு பழைய ஓய்வூதியம் வேண்டுமென்றால் இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என பரப்புரை மேற்கொண்டார்.