டெல்டாவில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்கள் கொண்டு வர மாட்டோம் : அமைச்சர் உறுதி

டெல்டாவில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்கள் கொண்டு வர மாட்டோம் : அமைச்சர் உறுதி
டைட்டல் பார்க் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
டெல்டாவில் விவசாயத்தை பாதிக்கும் திட்டங்கள் கொண்டு வர மாட்டோம் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தஞ்சாவூர் ஒன்றியம் மேலவஸ்தாச்சாவடி அருகில் டைட்டல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில், தமிழ்நாடு டைட்டல் பார்க் மேலாண்மை இயக்குனர் ஜெயசந்திரபானு ரெட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

3.40 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுர அடியில் ரூ 27.13 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டிடமாக இந்த டைட்டல் பார்க் கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி ராஜா இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட டைட்டல் பூங்கா கட்டுமான பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது, டைடல் பூங்காவில் வெகுவிரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வர உள்ளன. டெல்டா பகுதியில் படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் மையமாக டைடல் பூங்கா அமையும்.

இது தஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். டெல்டா மாவட்டங்களில் எந்த காலத்திலும் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொழில்கள் வராது. அதே சமயம் இங்கு விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள் நிச்சயமாக கொண்டு வரப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் முதலமைச்சர் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

எனவே டெல்டா பகுதியில் எந்த வித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில் பேட்டைகளை கொண்டு வரும் பணி நடைபெறுகிறது. தமிழக முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஓசூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, செயற்பொறியாளர் பாலாஜி, து.செல்வம், டி.அருளானந்தசாமி, வட்டாட்சியர் அருள் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story