ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- பாஜக

ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- பாஜக

ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் இராமசீனிவாசன் பேசினார்.


ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர் இராமசீனிவாசன் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதுரையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மதுரை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் பேராசிரியர் ராம சீனிவாசன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை செல்லூர் அனுப்பானடி தெப்பக்குளம் இஸ்மாயில்புறம் முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறந்த வேனில் பேராசிரியர் ராம சீனிவாசன் தீவிரமாக தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர். வழி நெடுகிலும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பேசிய பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், திராவிட கட்சிகளின் துணையின்றி தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், மாநில அரசு திட்டங்கள் அனைத்திற்கும் அவர்கள் குடும்பப் பெயரையே வைக்கின்றனர் ஆனால் மோடி பெயரில் வகுக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் பிரதமரின் பெயரிலேயே வைக்கப்படுகிறது. மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு ரூபாய் 22 தருகிறது ஆனால் மாநில அரசு ரூபாய் ஒன்று மட்டும் கொடுத்துவிட்டு மீதி ரூபாயை இலவசங்களாக வகுக்கின்றனர். 2019ல் கோ பேக் மோடி என்று முழக்கமிட்ட மக்கள் இப்பொழுது கோ பேக் டூ மோடி (மோடியிடம் செல்லுங்கள்)என்று சொல்லும் மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர்,எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

Tags

Next Story