தடையில்லாமல் நூல் வழங்கக்கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பெடல்தறி, மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும், தடையில்லாமல் நூல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது இந்த பகுதி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பெடல்தறியில் சேலை மற்றும் காடா ரகங்களை அடிப்படையாக கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர் இவர்களுக்கு வழங்ககூடிய கூலி, அகவிலைப்படி மற்றும் நெசவுக்கு முந்தைய கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட புதிய முதியோர் ஓய்வூதிய கோரிக்கைகளுக்கு விரைவில் ஓய்வுதியத் தொகை வழங்க வேண்டும். நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் இறந்தால் அவரது வாரிசுதாரருக்கு காப்பீட்டுத் தொகை (ரூ.1,00,000) ஒரு லட்சம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கைத்தறி மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பாரதி நெசவாளர் சங்க தலைவர் ராஜகுரு மாவீரன் பகத்சிங் சோழ சங்கத் தலைவர் வீராசாமி முன்னிலையில் போட்டு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் எக்ஸ் எம்பி ஆன லிங்கம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரவி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் போராட்டம் ஏற்பாடுகளை நகர செயலாளர் பி கே விஜயன் செய்திருந்தார்.

Tags

Next Story