இணையதள வசதி வழங்கும் திட்டம் - கலெக்டர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இணையதள வசதி வழங்கும் திட்டம் குறித்து கலெக்டர் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 359 ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வரும் செப்டம்பா் மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது, 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான உபகரணங்களை பாதுகாக்கவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்யவும், பிஓபி பொருத்தப்பட்டுள்ளஅறையில் வேறு தேவையற்ற பொருள்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யூபிஎஸ், ரௌட்டா், கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும். மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினா் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
Next Story