இணையதள பகுதிநேர வாய்ப்பு விளம்பரத்தை தவிர்க்க வேண்டும்: எஸ்பி
எஸ்பி அறிவுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் உசிலம்பட்டி காவல் துறை சார்பாக சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தொடங்கி மதுரை மெயின் சாலை வழியாக தேவர் சிலை ரவுன்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீசார் மற்றும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவின் உமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையாஇடிஎஸ்பி விஜயகுமார்இசைபர் கிரைம் மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் தர்மர்இ சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கரன உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ஜோதி ராஜன் உள்ளிட்ட மாணவஇ மாணவிகள்இ கல்லூரி பேராசியர்கள்இ காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மதுரை மாவட்ட எஸ்பி டோங்ரோ பிரவின் உமேஷ்இ கூறுகையில் இன்ஸ்ட்டாகிராம்இ வாட்ஸ்அப்இ பேஸ்புக் உள்ளிட்ட இணயதளங்களில் பகுதிநேர வாய்ப்பு விளம்பரத்தை தவிர்க்க வேண்டும்இ யாருக்கும் தொலைபேசியில் ஓடிபியை சொல்லகூடாது எனவும்இ பொதுமக்கள் இணையதளங்களில் கவனமாக கையாள வேண்டும் பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்து விட்டுச் சென்றால் காவல் துறையினர் உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் அவ்வப்போது ரோந்துப்பணியில் ஈடுபடுவர்.குற்றங்களைத் தடுக்கலாம் என பேசினார்.