திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி !

திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி !

விபத்து

சிவகங்கை அருகே திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 32 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் பகுதியைச் சேர்ந்த 32 பேர் வேனில் சிவகங்கை அருகே கடம்பங்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். வேனை திருப்பாச்சேத்தி அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். செம்பனூர் பகுதியில் வரும்போது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே கீழப்பிடாவூரைச் சேர்ந்த கலைஞர் (48) என்பவர் உயிரிழந்தார். மேலும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 36 பேர் காய்மடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இதுகுறித்து சிவகங்கை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story