புதன்சந்தை மாட்டு சந்தை; ரூ.1.70 கோடிக்கு வர்த்தகம்

புதன்சந்தை மாட்டு சந்தை; ரூ.1.70 கோடிக்கு வர்த்தகம்

 சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை மாட்டு சந்தைக்கு கர்நாடகா, அண்டை மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து அதிகரிப்பு; ரூ.1.70 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை மாட்டு சந்தைக்கு கர்நாடகா, அண்டை மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து அதிகரிப்பு; ரூ.1.70 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

சேந்தமங்கலம், டிச. 14 நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தைக்கு கர்நாடகா, அண்டை மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து அதிகரிப்பு. நேற்று புதன்சந்தை மாட்டுசந்தைக்கு 1200க்கும் மேற்பட்ட பசு, எருமை, கறவை மாடுகள், இறைச்சி மாடுகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு வந்திருந்தன. கேரளாவில் ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியதால் மாடுகளை வாங்கவும், விற்கவும் புதன்சந்தை மாட்டு சந்தைக்கு கேரளா வியாபாரிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. கர்நாடகா, சத்தீஸ்கர், அண்டை மாநிலங்கள், கோயம்புத்துார், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் கூடினர். புதன்சந்தை மாட்டுசந்தையில் நேற்று கறவை மாடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

கடந்த வாரம், 20,000 ரூபாய்க்கு விற்ற இறைச்சி மாடுகள், நேற்று விலை ரூபாய் 500 அதிகரித்து 20,500 ரூபாய்க்கு விற்பனையானது. 6,000 ரூபாய்க்கு விற்ற கன்று குட்டிகள், நேற்று விலை ரூபாய் 300 உயர்ந்து 6,300 விற்பனையானது. பசு மாடு கடந்த வாரம் 35,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று விலை ரூபாய் 1000 உயாந்து 36,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம் 30,000 ரூபாய்க்கு விற்ற எருமை மாடு 3,000 விலை உயர்ந்து 33,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று புதன்சந்தை மாட்டுசந்தையில் வர்த்தகம் அதிகரித்து ரூ.1.70 கோடிக்கு நடந்தது.

Tags

Next Story