கங்கேயத்தில் மழையின் காரணமாக வாரச்சந்தை வியாபாரம் பாதிப்பு

கங்கேயத்தில் மழையின் காரணமாக  வாரச்சந்தை வியாபாரம் பாதிப்பு

வாரசந்தைக்கு வந்த மக்கள்

காங்கேயத்தில்மழையின் காரணமாக திங்கட்கிழமை வாரச்சந்தை வியாபாரம் பாதிக்கபட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் வாரச்சந்தை திங்கள்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட சந்தைக் கடைகள் செயல்பட்டு‌ வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோடைகால ஏற்படும் வெப்ப சலனத்தின் காரணமாக மாலை சுமார் 5 மணி அளவில் துவங்கிய மிதமான காரணமாக வாரச்சந்தை வளாகத்தில் மழைநீர் வழிந்தோடியது. இதனால் காய்கறி கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பெரும் சோகமடைந்தனர். இதனால் பொதுமக்களின் வரத்து கணிசமாக குறைந்தும்,

ஒரு சிலர் மழைநீரில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்து கொண்டும் காய்கறிகளை வாங்க வந்தனர். மேலும் கடந்தவார திங்கட்கிழமை இதேபோல் பெய்த மழையின் காரணமாக சந்தை வியாபாரம் பாதிப்படைந்த நிலையில் இந்த வாரமும் மாலை முதல் மழைநீர் சந்தை வியாபாரிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியது. இதனால் காங்கயத்தில் நேற்று வாரச்சந்தை வியாபாரம் கடந்த வாரத்தை போலவே மந்த நிலையை அடைந்தது.

Tags

Next Story