ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி

ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி

கவாந்து பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெறுவதை எஸ்.பி பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாரந்தோறும் காவலர்களுக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடைபெறும். அதன்படி மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சிக்கு மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

Tags

Next Story