செங்கல்பட்டு :மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

செங்கல்பட்டு :மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
மக்கள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, அரசு பேருந்து சேவை, கல்வி கடன், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 214 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், 39 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 17.68 லட்சம் ரூபாய் மதிப்பில், செயற்கை கை, கால்கள் மற்றும் 150 பயனாளிகளுக்கு, 6.54 லட்சம் ரூபாய் மதிப்பில், காதொலி கருவிகள், ஒரு பயனாளிக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனத்தை கலெக்டர் வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story