விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் இந்த வார விலை நிலவரம்

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் இந்த வார விலை நிலவரம்

 அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்

விருதுநகர் சந்தை : உச்சபட்ச விலையை தொட்ட துவரம் பருப்பு : உருட்டு உளுந்து, பாமாயில் விலை உயர்வு : வத்தல் விலை குறைவு ....
விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு வரலாறு காணாத வகையில் பெரும் விலை உயர்ந்துள்ளது. பாமாயில், உருட்டு உளுந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. முண்டு வத்தல், பாமாயில் விலை சற்று குறைந்தது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது. பாமாயில் விலையானது கடந்த வாரம் 15 கிலோ ரூ.1550 என விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் டின் ஒன்றுக்க ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே டின் ஒன்று ரூ1565 என விற்கப்படுகிறது. முண்டு வத்தல் புதுசு வகை 100 கிலோ ரூ.18ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ஆயிரம் வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வத்தல் நாடு புதுசு வகையானது கடந்த வாரம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.500வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மூட்டை ஒன்று ரு. 12,500 முதல் 14 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு நயம் புதுசு லயன் வகை 100கிலோ ரூ.14,100 என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு 4,100 வரை உயர்வு ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக மூட்டை ஒன்று ரூ.15,500 என விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் ரூ.12ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ,.700 வரை உயர்ந்துள்ளது. எனவே, ரூ.12,700 எனற விற்கப்படுகிறது. இதேபோல் உளுந்து ( நாடு வகை) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்படட நிலையில் இந்த வாரம் ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.10,200 என விற்கப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story