விருதுநகர் மாவட்ட சந்தையில் வார விலை நிலவரம்

விருதுநகர் மாவட்ட சந்தையில் வார விலை நிலவரம்
கோப்பு படம் 
விருதுநகர் மாவட்ட சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் இந்த வார விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, பாசிப் பயறு, பாமாயில் ஆகியவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. தொலி உளுந்தம் பருப்பு உருட்டு உளுந்து ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : பாமயில் விலையானது கடந்த வாரம் முதல் தற்போது வரை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 15கிலோ பாமாயில் விலை ரூ.1550 என விற்ற நிலையில் இந்த வாரம் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, டின் ஒன்று ரூ.1575 என விற்கப்படுகிறது. துவரம் பரப்பு கடந்த வாரம் 100 கிலோ நயம் புதுசு வகை ரூ.13500 என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ரூ.13800 என விற்பனை செய்யப்படுகிறது.

பாசிப் பயறு இந்தியா நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8800 என விற்ற நிலையில் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.9200 என விற்பனையாகிறது. உளுந்து நாடு 100 கிலோ கடந்த வாரம் ரூ.9200 என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.9100க்கு விற்கப்படுகிறது. உளுந்து லையன் 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,205க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.205 குறைந்துள்ளது.

எனவே ரூ.10ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5250க்கு விற்ற நிலையில் இந்த வாரம் ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, குவிண்டால் ரூ.5400க்கு விற்கப்படுகிறது. எள் புண்ணாக்கு 50 கிலோ கடந்த வாரம் ரூ.2700 க்கு விற்ற நிலையில் இந்த வாரம் ரூ.200 குறைந்துள்ளது.

எனவே, ரூ.2500க்கு விற்பனையாகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story