இந்து எழுச்சி முன்னணி சார்பில் வார வழிபாடு நிகழ்ச்சி

வார வழிபாடு நிகழ்ச்சி
தேனி அல்லி நகரத்தில் உள்ள மாவட்ட இன்று எழுச்சி முன்னணி காரியாலயத்தில் மாவட்ட செயற்குழு சுப்பையா தலைமையில் தேனிநகரச்செயலாளர் கனகுபாண்டி முன்னிலையில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நடந்து முடிந்த முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 62% வாக்குகளே பதிவாகி உள்ளது. வரும் காலங்களில் இந்நிலை மாறி 100 சதவிகித வாக்கு பதிவு ஆகக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகளானது கட்டாய வாக்குப்பதிவு முறையை கொண்டு வருவதற்கான சட்டதிட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.
தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 3ம் ஆண்டாக இந்து எழுச்சி முன்னணி நடத்திய மாபெரும் அன்னதானத்திற்கு பொருள் உதவியும், நிதி உதவியும் உடல் உழைப்பும் வழங்கிய இயக்க ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றி கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது தற்போது கேரளாவிலும் சூறாவளி பயணம் மேற்கொண்டு ஓய்வு,உறக்கம் இன்றி அயராது பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதாகட்சியின் தலைவர் அண்ணாமலை நல்ல ஆயுள்,ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் நலமுடன் இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
