பாஜக சார்பில் பளு தூக்கும் போட்டி

அருப்புக்கோட்டையில் பாஜக நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி சாலையில் உள்ள மாஸ்டர் ஜிம் அரங்கில் பாஜக நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மற்றும் மாஸ்டர் ஜிம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.

56 கிலோ, 62 கிலோ, 70 கிலோ, 77 கிலோ, 85 கிலோ பிரிவு, ஜூனியர் பிரிவு, பெண்கள் பிரிவு என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பளு தூக்கி தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர். இளைஞர் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி பெறும் முனைப்போடு பளு தூக்கினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பாஜக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பரிசு கோப்பைகள் மற்றும் ரூ 6,000 பரிசு பணம் வழங்கினார்.

மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளிக்காசும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பாஜக மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பாஜக நகர விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாஸ்டர் ஜிம் உரிமையாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story