முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி சாத்தூரில் வரவேற்பு
விருதுநகர் மாவட்டம் வந்தடைந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி சாத்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் கலைஞர் கருணாநிதியின் திரு உருவ சிலையுடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்* மறைந்த திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சி படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டிக்கு வந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பிரபலங்கள் வரவேற்றனர். பின்னர் ஊர்தியில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சாத்தூரில் உள்ள முக்குராந்தல் மற்றும் பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியில் உள்ள கலைஞர் கருணாநிதியின் திரு உருவ சிலையுடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
Next Story