மகிளா காங்கிரஸ் மாநில தலைவருக்கு வரவேற்பு!

மகிளா காங்கிரஸ் மாநில தலைவருக்கு வரவேற்பு!

வரவேற்பளித்த காங்கிரஸ் கட்சியினர் 

காவேரிப்பாக்கம் பகுதியில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசீனா சையத் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வந்துள்ளார். அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவி எம்.பிரவீனா சரவணன் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காவேரிப்பாக்கம் ஒன்றிய தலைவர் செல்வம், மாவட்ட மூத்த துணைத்தலைவர் கணேசன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகியும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான இந்திரா, மற்றும் பிரேமா, நகர தலைவர் மண்ணு, மாவட்ட செயலாளர் நரசிம்மன், நகர செயல்தலைவர் செந்தில் உள்பட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story