பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் விடுதி மாணவர்களுக்கான வரவேற்பு விழா

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் விடுதி மாணவர்களுக்கான வரவேற்பு விழா

வரவேற்பு விழா

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் விடுதி மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் திரு.என்.வி.நடராஜன் அவர்கள் தலைமை வகித்தார்.

தாளாளர் மங்கை நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் மற்றும் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர்.சி.சதீஸ் ஆகியோர் கேம்ப்பயர் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில், ’உற்சாகம் ததும்பும் மாணவர்களாகிய உங்களை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று இந்த கேம்ப்பயர் நிகழ்ச்சியில் உங்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. மாணவர்களாகிய உங்களுக்கு இந்த விடுதி நாட்கள் இனிமையான நாட்களாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல அனுபவங்களை சேகரிக்க வேண்டும். மேலும் எப்பொழுதும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு குழுவின் வெற்றி என்பது ஒவ்வொருவரின் தனித்திறமைகள் ஒற்றுமையுடன்ரூபவ் ஒரே களத்தில்ரூபவ் ஒரே நோக்கத்துடன் செயல்படுவது ஆகும். எனவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய தனித்தன்மையுடன்ரூபவ் உங்களின் பொறுப்புகளை சரியாக செயல்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்களும் வெற்றி பெற்றுரூபவ் உங்கள் குழுவும் வெற்றி பெறும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

தொடர்ந்து விடுதி ஆரா மற்றும் மிரா குழு மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பாக செயலாற்றிய மிரா அணிக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்கள் கோப்பையினை வழங்கினார்.

பின்னர் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர்.சி.சதீஸ் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். விழாவில் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் ரோஹித், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story