அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு
அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு புதுக்கோட்டை அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அடுத்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் தொடங்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளனர்.
இதற்காக பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் ஆங்காங்கே தற்பொழுது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை சேர்ந்த கருப்பையா என்பவர் போட்டிடுவார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று முக்கிய நிர்வாகிகளை சிந்தித்து தமக்கு வாக்களிக்க வேண்டும் அதேபோல் திருச்சி தொகுதி அதிமுக கைப்பற்றி வெற்றிக்கனியை நமது கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
பின்னர் புதுக்கோட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வருகை புரிந்த அவருக்கு பட்டாசுகள் வெடித்து சால்வைகள் போற்றப்பட்டு மலர் மாலைகள் அறிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ. எஸ் சேட்டு தலைமையில் புதுக்கோட்டை நகர வடக்கு பகுதி செயலாளர் பாஸ்கர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு பொன்னாடைகள் போற்றப்பட்டு வேட்பாளர் அறிமுகப்படுத்தப்பட்டார் பின்னர் பேசிய வேட்பாளர் கருப்பையா எனக்கு போட்டியிட பரிந்துரை செய்த தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கருக்கு மனமார்ந்த நன்றி என்றும் அதேபோல் எனக்கு சீட் வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மட்டுமல்ல அது திருச்சியில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் என் பெயரை பரிந்தார்கள்.
அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் என்னை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் பிள்ளையாக இருப்பேன் அதேபோல் விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தை ஏற்கனவே இருந்தது போல் தனி நாடாளுமன்ற தொகுதியாக மாற்றுவதற்கு என்னால் முடிந்த கடமையாற்றுவேன் அதேபோல் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கோரிக்கையாக வைத்து புதுக்கோட்டையை தனி பாராளுமன்ற தொகுதி ஆக மாற்ற முயற்சி செய்வேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் வட்டக் கழக பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.