பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு வரவேற்பு
ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு
சேலத்திற்கு வந்த பாமக தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக சேலத்துக்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி,
பா.ம.க. மாநில மாணவர் அணி செயலாளர் வக்கீல் விஜயராசா, ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் சங்க அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் தர்மராஜ், சூர்யா, ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story