ஊத்தங்கரையில் திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு
வாகன பேரணிக்கு வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதிக்கு வருகை தந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், தலைமையில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், லயோலோ ராஜசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கந்தசாமி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் மாலதி, ஆதி வேலு, உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநில இளைஞர் அணி மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் விலக்கு - நம் இலக்கு என்ற முழக்கத்தோடு அரூர் வழியாக சேலம் நோக்கி பயணம் மேற்கொண்டனர். இந்த இருசக்கர வாகனப் பேரணி தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயணம் செய்து தி.மு.க அரசின் சாதனைகள் குறித்தும், நீட் பாதிப்பு குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஊத்தங்கரை பகுதிக்கு வாகன பேரணி வந்தடைந்தது கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.