சின்னசேலத்தில் ஒலிம்பிக் ஜோதி ரதத்திற்கு வரவேற்பு

X
ஒலிம்பிக் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்
சின்னசேலத்தில் ஒலிம்பிக் ஜோதி ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த ஆர்ய வைசிய ஒலிம்பிக் ஜோதி ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆர்ய வைசிய இளைஞர் சங்கம் சார்பில் திருவண்ணாமலையில் ஆர்ய வைசிய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று 30 மற்றும் 31ம் தேதிகளில் நடக்கிறது. அதற்கான ஒலிம்பிக் ஜோதி ரதம் சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு வந்தது.
பரரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சின்னசேலம் ஆர்ய வைசிய சங்க நிர்வாக தலைவர் ரவீந்திரன் தலைமையில் கோபி முன்னிலையில், ஒலிம்பிக் ஜோதியை ஊர்வலமாக எடுத்துச்சென்று திரவுபதி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஒலிம்பிக் ரதம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
