ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதற்கு வரவேற்பு!
நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று முன் தினம் கூடியது. இதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு , பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. இதற்கு திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பின் தலைவர் ராமு முத்துராமன் கூறுகையில் , 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிரிவு 73 கீழ் வழங்கப்பட்ட நோட்டீசுகளில் ஏமாற்றுதல் , மோசடி போன்ற வழக்குகள் இல்லாத மற்ற நோட்டீஸ்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் வரி செலுத்தி அபராத வட்டியை தவிர்க்கலாம் என்ற பரிந்துரை.
பள்ளி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் தங்கும் போது ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவது. பால் கேன் , சோலார் குக்கர் உள்ளிட்ட பொருட்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறிக்கப்பட்டு இருப்பது , மேல் முறையீடு சிக்கல்களை குறைப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டு இருப்பது ஆகிய அம்சங்கள் வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.