அயோத்தி இயக்குனர் மந்திரமுர்த்திக்கு வரவேற்பு

அயோத்தி இயக்குனர் மந்திரமுர்த்திக்கு வரவேற்பு
X

விருது வழங்கல் 

வசவப்புரத்தில் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமுர்த்திக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் பாதுகாப்பு கழகம் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கடந்த வருடம் திரைக்கு வந்து பல்வேறு விருதுகளையும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அயோத்தி. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்துள்ளார். மனித நேயத்தினை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப் படத்தினை இயக்கியவர் மந்திர முர்த்தி. இவர் நெல்லை மாவட்டம் சங்கணாங்குளத்தினை சேர்ந்தவர். இவர் தனது சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து விட்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் வழியாக சென்னை செல்ல வந்தார்.

அவரை வசவப்பபுரத்தில் வைத்து பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் பாதுகாப்பு கழகம் சார்பில் நிறுவனர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு தென்காசி மாவட்டம் தோரணமலையில் சித்திரை புத்தாண்டையொட்டி விருது வழங்கப்பட்டது. எதிர்பாரத விதமாக அந்த விருதை அன்று இயக்குனர் மந்திர மூர்த்தி வாங்க வருகை தர முடியவில்லை. எனவே அந்த விருதை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஏற்பாட்டில், தெற்கு காரசேரி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனரின் தந்தை ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story