கலசபாக்கத்தில் திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு
இருசக்கர வாகன பேரணி
திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்தும் வரும் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞர் அணி சார்பில் மாநாடு நடைபெருக்கிறது. இதையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வுபேரணி நடைபெற்று வருகிறது. இந்த வாகன பேரணி நேற்று கலசபாக்கத்திற்கு வந்தது. கலசப்பாக்கம் வந்த வாகன பேரணிக்கு இளைஞரணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கபப்ட்டது. நீட் தேர்வை கண்டித்து, நீட் விலக்கு இது நம் இலக்கு என்று கோஷமிட்டு பேரணி சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அ.சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜாங்கம், கண்ணதாசன், ராஜசேகர், ரமேஷ், சதீஷ், திலீப், நகரச் செயலாளர் சௌந்தரராஜன், ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா சுதாகர், ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்பளித்தனர்.
Tags
Next Story