ஜோலார்பேட்டை காந்திபுரம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மருந்து அருந்திய வெல்டர் உயிரிழப்பு
உயிரிழப்பு
ஜோலார்பேட்டை காந்திபுரம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மருந்து அருந்திய வெல்டர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திபுரம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மருந்து அருந்திய வெல்டர் உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்பவரின் மகன் சுந்தரம் (30). இவர் வெல்டிங் வேலை செய்து வருகின்றார் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு காலை வரை வெகு நேரம் ஆகியும் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே வராததால் இவரது பெற்றோர்கள் மேலே சென்று பார்த்த போது சுந்தரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை அறிந்த இவரது குடும்பத்தினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story