அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரோட்டரி சங்கத்தினர்

ரோட்டரி சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு பொருட்கள், கிரீன் போர்டுகள், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநர் பரணிதரனின் அலுவல் பூர்வ வருகை நடைபெற்றது. தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.இந்நிகழ்வில் அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு பொருட்கள், கிரீன் போர்டுகள், தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர். வாழ்குடை மேனிலைப்பள்ளி ஏழை மாணவரின் கல்விக்காக ரூ.6100/- பண உதவி வழங்கினர். இதில் மாவட்ட எழுத்தறிவு திட்ட சேர்மன், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story